Thursday, November 12, 2015

பருவ மழை: திண்டிவனம் பகுதியில் சம்பா சாகுபடி தொடக்கம்


திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன.
திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் ஆதிகமாகவே இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மரக்காணத்தில் 100 மில்லி மீட்டரும், திண்டிவனத்தில் 65 மி.மீட்டரும் மழை பதிவானது.
திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் 10,412 திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் 150 ஏரிகள் நீர்ப்பாசனத்துக்கு பயன்பட்டு வருகிறது. இம்மழையினால் திறந்த வெளிக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும், ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் கென்னடிஜெபக்குமார் கூறுகையில், விவசாயிகளுக்குத் தேவையான ஆடுதுறை 39 ரகம் நெல் விதைகள் போதிய அளவு விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில்
காம்ப்ளக்ஸ் மற்றும் யூரியா இருப்பு உள்ளது.
விவசாயிகள் நடப்பு சம்பா பருவத்தில் அதிக அளவில் இயந்திர நடவு செய்து மகசூலினை அதிகரித்திடலாம். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வேளாண் துறை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Source : Dinamani

No comments:

Post a Comment