புதுகை மாவட்டத்தில் நடப்பு சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் டிச.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்(பொறுப்பு) எஸ். பால்வடிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுகை மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நடப்பு சம்பா நெல் பயிருக்கு கடன் பெறாத விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய 15.12.2015 ஆம் தேதி இறுதி நாளாகும். தொடக்க
வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகளுக்கு கட்டாயத்தின் பேரிலும், பயிர்க்கடன் பெறாத விவசாயிகளுக்கு விருப்பத்தின் பேரிலும் பயிர்க்காப்பீடு செய்யப்படுகிறது.
நடப்பாண்டு சம்பா நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு சாதாரண காப்பீடுத் தொகையாக ரூ.14,904 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் பெறாத விவசாயிகள் சம்பா நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு ரூ.135-ம், கடன் பெற்ற விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.149ம் பிரிமியம் செலுத்த வேண்டும்.
நெல் பயிருக்கு கூடுதல் காப்பீடுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.13,040 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் காப்பீடு பிரிமியமாக விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் செலுத்தி கூடுதல் காப்பீடு செய்யலாம்.
எனவே மாவட்ட விவசாயிகள் காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி வரை காத்திருக்காமல் பயிரிட்டதற்கான தக்க(கிராம நிர்வாக அலுவலர் சான்று) ஆதாரத்துடன் தங்களது பகுதியிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை வரும் 15.12.2015 -ஆம் தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : Dinamani
No comments:
Post a Comment