சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:வங்க கடலில் புதிதாக உருவாகும் காற்று அழுத்த தாழ்வு நிலையை கவனித்து வருகிறோம். அதனால் ஏற்படும் தாக்கங்களை இப்போதைக்கு தெரிவிக்க இயலாது. அரபி கடலில் ஏற்பட்டுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்றார்.
No comments:
Post a Comment