காஞ்சிபுரம் : 'கொளவாய் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமைக்கான பொது ஏலம், வரும், 12ம் தேதி நடைபெற உள்ளது' என, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மீன் உற்பத்தியை அதிகப்படுத்தும் விதமாக, மீன்வள துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 53 நீர்த்தேக்கங்களை, மீன்வள துறை குத்தகைக்கு விடுகிறது. அந்த வகையில், 2015ம் ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளவாய் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை, ஐந்து ஆண்டுகளுக்கு, பொது ஏலம் மூலம் குத்தகை விடப்பட உள்ளது.ஒப்பந்தப்புள்ளி விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகள் நகல் www.tenders.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து, விருப்பமுடையவர், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மீன்துறை ஆணையர் அலுவலகத்தில் வரும், 12ம் தேதி நடைபெறும் ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment