Thursday, November 5, 2015

நெற்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவிப்பு



நெல்லின் தூர் பகுதியில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்த நிலக்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இது குறித்து, நிலக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் கா.முருகன் தெரிவித்தது: கடந்த சில நாள்களாக மேகமூட்டமான சூழ்நிலை நிலவி வருகிறதுபருவநிலை மாற்றத்தால் சில இடங்களில் புகையான் தாக்குதலால் நெல் தூர்பகுதி காய்ந்து பழுப்பு நிறத்தில் தென்படுகிறது.   எனவே, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரத்தில் அணைப்பட்டி, மட்டப்பாறை, விளாம்பட்டி மற்றும் ராமராஜபுரம் பகுதிகளைச் சேர்ந்த நெல் சாகுபடி விவசாயிகள் தங்களது வயலில் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், நெல் பயிரின் தூர்பகுதியை 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் பயிரை நன்றாக ஒதுக்கிவிட்டுசூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் பயிருக்கு நன்றாக கிடைக்கச் செய்திட வேண்டும்.
  மேலும், வயலில் உள்ள நீரை வெளியேற்றி விட்டு, மாலத்தியான் தூள் மருந்தினை ஏக்கருக்கு 15 கிலோ என தூர்பகுதியில் படும்படி தூவி, புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். அல்லது  ஒரு  லிட்டர் தண்ணீருக்கு அசிப்பேட் 2 கிராம், நூவான் 1 மில்லி சேர்த்து தெளித்தும் புகையானைக் கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.    மேலும்  இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் தொடர்புகொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொண்டார்.


http://www.dinamani.com/edition_madurai/dindigul/2015/11/06/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3115523.ece

No comments:

Post a Comment