Thursday, November 5, 2015

தீவன பற்றாக்குறையை போக்க விவசாயிகளின் வீடுதோறும் மரக்கன்று:கால்நடைத்துறையினர் மும்முரம்




            காரைக்குடி:ஆடு, மாடுகளுக்குரிய தீவன பற்றாக்குறை அதிகரித்து வரும் வேளையில், கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை மருத்துவ மனைகளில் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு சார்பில் விலையில்லா கறவை மாடு, ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களில் வீடுதோறும் கால்நடை வளர்ப்பு பெருகி வருகிறது. மேய்ச்சல் நிலம் விற்பனையாகி வருவதால், தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவு,குப்பைகளை ஆடு, மாடுகள் உணவாக உட்கொள்ளும் அவலம் உள்ளது.
இருக்கின்ற ஒரு சில இடங்களில் மழைக்காலங்களில் மட்டுமே மேய்ச்சலுக்கான புல்வெளி உள்ளது. கோடை காலங்களில் தீவன பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், கால்நடை துறை சார்பில் மானியத்தில் தீவனம் வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையை போக்கும் வகையில், ஆடுகளுக்குரிய தீவனமரங்களான பூவரசு, கொன்றை, முள்முருங்கை, வாகை மரங்களை வீடுதோறும் வைக்க, கால்நடைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு பயனாளிக்கு இலவசமாக ஐந்து மரக்கன்று வீதம், ஒரு மருத்துவமனைக்கு 150 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன்கார்டு நகல் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை கூறி, இவற்றை அந்தந்த கால்நடை மருத்துவமனைகளில் விவசாயிகள் பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment