Thursday, November 5, 2015

க.பரமத்தியில் அதிக மழைப்பதிவு: மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி


கரூர்: கரூர் மாவட்டம் முழுவதும், பரவலாக மழை பெய்ததால், மானாவாரி பயிர் செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை, 8 முதல் நேற்று காலை, 8 மணி வரை பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு விவரம்: .பரமத்தியில் அதிகபட்சமாக, 151.6 மி.மீ., மழை பெய்தது. குறைந்தளவாக குளித்தலையில் 20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அரவக்குறிச்சியில் 73, தோகமலையில் 30, மாயனூரில் 44, கரூரில் 69, அணைப்பாளையத்தில் 111, பஞ்சப்பட்டியில் 40, பாலவிடுதியில் 95.4, கடவூரில் 43, கிருஷ்ணராயபுரத்தில் 42, மயிலம்பட்டியில், 85 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம், 804 மில்லி மீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. சராசரியாக, 67 மி.மீ., மழை பெய்துள்ளது. இதன்காரணமாக கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மானாவாரி பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ''தற்போது பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், காய்ந்து கிடந்த கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி கால்நடைகளுக்கும், விவசாயத்துக்கும் பயன்பட்டு வருகிறது,'' என்று .பரமத்தியைச் சேர்ந்த விவசாயி ராமராஜன் கூறினார்.



No comments:

Post a Comment