திருநெல்வேலி :நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணை நீர் இன்று திறக்கப்படுகிறது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிசான நெல்சாகுபடி பருவத்திற்கான நெல்நடவு பணிகள் தற்போது வங்கியுள்ளது. வடகிழக்குபருவமழையை நம்பி மேற்கொள்ளப்படும் இந்த தருணத்தில், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறுஅணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெ.,உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் 11 கால்வாய்களின்மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு இன்று 6ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நெல்லை கலெக்டர் கருணாகரன், பாபநாசம் அணையை இன்று திறந்துவைக்கிறார்.இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
No comments:
Post a Comment