Tuesday, November 17, 2015

நிரம்பிய சோத்துப்பாறை அணை 16 நாட்களுக்கு பிறகு இன்று திறப்பு



பெரியகுளம்,: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் மொத்த உயரம் 126 அடி. இப்பகுதியில் பெய்து வரும் மழையால் கடந்த அக்.,14 ல் அணையின் நீர்மட்டம் 100அடியை தொட்டது. நவ.,2 முதல் அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அதன்பிறகு 16 நாட்கள் கழித்து சோத்துப்பாறை அணை இன்று திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஆயக்கட்டு பகுதிகளான பெரியகுளம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய், பாப்பிபட்டி கண்மாய் மற்றும் மேல்மங்கலம் பகுதிகளில் உள்ள 1,892 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்களும், நூற்றுக்கணக்கான ஏக்கர் மறைமுகமான விவசாய நிலங்களும் பயன்பெறும். புதிய ஆயக்கட்டு பகுதிகளான லட்சுமிபுரம் பகுதிகளில் உள்ள 1,0 40 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களும் பன்றுபெறும். 


No comments:

Post a Comment