Tuesday, November 17, 2015

முருங்கைக்காய், இலை உற்பத்திக்கு மானியம்


             திண்டுக்கல்:தேசிய தோட்டக்கலை துறை இயக்க திட்டத்தில் முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுகிறது. திண்டுக்கல்லில் முருங்கைக்காய் மற்றும் இலை உற்பத்திக்கு 75 சதவீதம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு எக்டேர் முருங்கை காய் உற்பத்திக்கு மானியமாக ரூ.62,500க்கு இடு பொருளாக உரம், பூச்சி மருந்து, விதைகள் வழங்கப்படும். மே<லும், முருங்கை இலை உற்பத்திக்கு இடு பொருள், விதைகள் மற்றும் மானியமாக ரூ, 1 லட்சமும், அதில் நிலம் தயார்படுத்த, தனியே விவசாயிகள் வங்கி கணக்கில் ஒரு பகுதியும் செலுத்தப்படும். தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ராமநாதன் கூறுகையில்,""விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தின் மூலம் முருங்கை காய் மற்றும் இலையின் உற்பத்தியை பெருக்கலாம். மானியம் பெற விவசாயிகள் கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, புகைப்படத்தை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment