வனத் துறை சார்பில், 13 வகையான, 62 ஆயிரம் மரக்கன்றுகள் ஒன்றியத்தில் நடவு செய்ய, தயார் நிலையில் உள்ளன.
திருத்தணி வனத் துறையினர், குமாரகுப்பம் பகுதியில் நாவல், பாதாம், நீர்மருது, ஆயா, புங்கன், வேம்பு, பலா, புளியன், தேக்கு, செம்மரம், பூவரசு உள்பட 13 வகையான மரக் கன்றுகள் நடவு செய்வதற்கு தயார் நிலையில் வைத்து பராமரித்து
வருகின்றனர்.
இதை, நேற்று முன்தினம், ஆட்சியர் சுந்தரவல்லி பார்வையிட்டார். இந்த மரக்கன்றுகள், திருத்தணி தாலுகாவில் நடவு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, திருத்தணி வனத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வனத் துறை சார்பில், 5,500 மரக்கன்றுகள், வனத் துறைக்கு சொந்தமான இடங்களில் நடப்படும். மீதமுள்ள மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சி முகாமை திட்டத்தின் கீழ், ஒன்றிய நிர்வாகம் மூலம் நடவு செய்யப்படும். மரக்கன்றுகளை பிளாஸ்டிக் கவரில், தரமான மண் வளத்தில் வைத்து பாதுகாத்து
Source : Dinamalar
No comments:
Post a Comment