Monday, June 6, 2016

ஜூன் மாதத்திற்குள் 30 ஆயிரம் மண்மாதிரி அட்டை வழங்க உத்தரவு

திண்டுக்கல்லில் கூடுதலாக 30 ஆயிரம் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகளை ஜூன் மாதத்திற்குள் வழங்க வேளாண் இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் மண்வள அட்டை திட்டத்தை இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்த ஆணையிட்டது. நாடு முழுவதும் தேசிய மண்வள அட்டை இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டம் மூலம் மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, மண் வகை, மண்ணின் தன்மை, அதிலுள்ள சத்துக்களின் விவரங்கள் பட்டியலிடப்படுகின்றன. மேலும் அம்மண்ணில் என்ன பயிர் பயிரிடலாம் என்பதையும் பரிந்துரைக்கின்றனர்.
அதன்படி விவசாயி செயல்பட்டால் மண்ணின் தன்மை மாறி விளைச்சல் அதிகரிக்கும்.
திண்டுக்கல் இணை இயக்குநர் சம்பத்குமார் தெரிவித்ததாவது: 2017க்குள் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, அதன் தன்மையை ஜி.பி.எஸ்., மூலம் எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் கணினியில் பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
இதனடிப்படையில் திண்டுக்கல்லில் சென்ற ஆண்டு மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 540 மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டை வழங்கும் வகையில் கூடுதலாக 30 ஆயிரம் மண் மாதிரிகள் ஆய்வு செய்து, முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம், என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment