Thursday, January 21, 2016

விரிவாக்க சீரமைப்புதிட்டம் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு


ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் குறித்து வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்க உயர் அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
காடையாம்பட்டி வட்டாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் விரிவாக்கச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, வேளாண் பொறியியல், வனத் துறை, பட்டு வளர்ச்சித் துறைகள் ஒருங்கிணைந்து பயிற்சி, பண்ணைப் பள்ளி, கண்டுணர்வு சுற்றுலா, செயல்விளக்கத் திடல்கள் குறித்த பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை, டேனிஷ்பேட்டை கிராமத்தில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் எஸ்.ஆர். வெங்கடாசலம், மாவட்ட வேளாண் துணை இயக்குநர் டி.பரணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ந.ராஜகோபால், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் கே. ராஜேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் க.புனிதராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
 Source : Dinamani

No comments:

Post a Comment