Thursday, January 21, 2016

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கவிவசாயிகளுக்கு அரசு மானியம்

சிவகங்கை,:சிவகங்கை மாவட்டத்தில் சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. 
பயிர்களின் இடைவெளிக்கு ஏற்றவாறு ஒரு விவசாயிக்கு எக்டேருக்கு ரூ.85 ஆயிரத்து 400 வீதம் அதிகபட்சமாக 5 எக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது.இதில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் ஆகும். இதற்காக மாவட்டத்தில் இந்த ஆண்டு சொட்டு நீர் பாசனமும், தெளிப்பு நீர் பாசனமும் அமைக்க ஆதி திராவிட விவசாயிகளுக்கு ரூ.46.33 லட்சமும், பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.2.43 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் நில ஆவணங்கள், ரேஷன் கார்டு, ஜாதிச்சான்றுகளுடனும், சிறு மற்றும் குறு விவசாயிகள் தாசில்தார் சான்று,பாசன ஆதாரச்சான்று, மண் மாதிரி மற்றும் நீர்பாசன ஆய்வு முடிவுகளை தங்களது பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையும், சிவகங்கையில் உள்ள தோட்ட கலைத்துறை அலுவலகத்தையும் அணுகி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment