16
06:41
06:41
சென்னிமலை: சென்னிமலை வட்டாரத்தில் தென்னை மரங்களை பாதுகாக்க, 50 சதவீத மானிய விலையில் சிவப்பு கூண்டு பொறி வழங்கப்படுகிறது. சென்னிமலை வட்டாரத்தில், 1 லட்சத்து, 77 ஆயிரத்து, 450 தென்னை மரங்கள் உள்ளன. மரங்களை சிவப்பு கூன் வண்டு அதிக அளவில் தாக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், 50 சதவீத மானிய விலையில், சிவப்பு கூண்டு பொறி, 115 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இப்போது, 750 கூண்டுகள் தயாராக உள்ளது. கூண்டுகள் தேவைப்படும் தென்னை விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என, சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரெங்கநாயகி தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment