உணவு பொருட்கள் சந்தை வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் சுமார் ரூ.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் இந்த துறையின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். இந்த துறை வர்த்தகம் வரும் 2017ல் 35.6 லட்சம் கோடியாக இருக்கும். 2020ம் ஆண்டில் ரூ.61 லட்சம் கோடியை தாண்டும் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். குறிப்பாக இத்துறையில் உலர் பழங்கள், தானியங்கள், பருப்பு வகை, சர்க்கரை, உணவு எண்ணெய் பங்களிப்பு 34.7 சதவீதமாக உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் உணவு பதப்படுத்தல் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
Source : dinakaran
Source : dinakaran
No comments:
Post a Comment