நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 25ஆம் தேதி காலை 9 மணிக்கு நெல், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப்பயிற்சி முகாமில் நெல், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடிக்கு மண்வளத்தினை கண்டறியும் வழிமுறைகள், மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள், மண் வளத்திற்கேற்ற சமச்சீர் உரமிடுதல் பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266244 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 24ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
Source : Dinamani
No comments:
Post a Comment