புதுச்சேரி, : புதுவை அரசின் வேளாண் துறை சார்பில் ஆண்டுதோறும் காய்கனி, மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தாவரவியல் பூங்காவில் காய்கனி, மலர் கண்காட்சி நாளை மறுதினம் (23ம் தேதி) தொடங்குகிறது. இதற்கான துவக்க விழா அன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. கவர்னர் ஏ.கே.சிங் துவக்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கண்காட்சியில் 57 வணிக அரங்குகள் மட்டுமின்றி மீன்வளத்துறை, பால் உற்பத்தி, தேசிய தோட்டக்கலை வாரியம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் 30க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகிறது.
அரங்குகளில் பலவகையான கண்கவர் மலர், காய்கனிகள் மற்றும் பலவித வேளாண் உற்பத்தி பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படுகிறது. மேலும், வேளாண் உபகரணங்களும் இடம்பெறுகின்றன. தேனீ வளர்ப்பு, காளாண் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து செயல்விளக்கம் அளிக்கும் அரங்குகளும் இடம்பெறுகிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட ஆர்க்கிட் மலர்கள், ஆந்தூரியன் பூக்கள் மற்றும் பெங்களூரு, பூனா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் செடிகள் தருவிக்கப்பட்டு வைக்கப்படுகிறது.
4 நாட்கள் நடைபெறும் கண்காட்சியின் நிறைவு விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. தானே புயலால் தாவரவியல் பூங்கா சிதிலமடைந்த நிலையில், சீரமைப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடந்ததால் கடந்தாண்டு மார்ச் மாதம் ஏஎப்டி திடலில் செயற்கை ஏசி கூடாரம் போட்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அடுத்தாண்டு முதல் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்திருந்தார். அதன்படி, இயற்கை எழில் சூழ்ந்த தாவரவியல் பூங்காவில் இந்தாண்டு மலர் கண்காட்சி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
source : Dinakaran

No comments:
Post a Comment