வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காய்கறிகளின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், ஆந்திரத்தில் இருந்து வேலூருக்கு தினந்தோறும் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த 4 நாள்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேதாஜி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் கிலோ ரூ.15-க்கு விற்ற பீன்ஸ் ரூ. 30, ரூ. 20-க்கு விற்பனையான கேரட் ரூ. 40, ரூ. 12-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ. 20, ரூ. 10-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 25-க்கும், பூண்டு ரூ. 120- என விற்பனை செய்யப்பட்டன.
Source : Dinamani
No comments:
Post a Comment