Tuesday, November 17, 2015

அதிக மகசூலுக்கு விதை ஆய்வு அவசியம்



            சிவகங்கை: ""நெல்லில் அதிக மகசூல் பெற விதைகளை ஆய்வு செய்ய வேண்டும்,'' என வேளாண்மை அலுவலர் தமிழ்செல்வி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தொடர் மழைக்கு விவசாயிகள் நெல் விதைப்பு பணியில் இறங்கி வருகின்றனர். விதைக்கும் விதை நல்ல தரமான வீரியமுள்ள விதையாக இருந்தால் மட்டுமே நாற்றுகள் வீரியமாக வளரும். இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும்.எனவே, விதை ஆய்வு செய்வது அவசியம். நெல் விதையில் 100 விதைத்தால், 80 வீரிய நாற்றுக்கள் கிடைக்கவேண்டும். அப்போது தான் உரம், மண்ணில் உள்ள சத்துக்களை நன்கு எடுத்து, அதிக எண்ணிக்கையில் தூர்கள் கட்டி பயிர் செழித்து வளரும். கதிர்களும் நன்கு திறட்சியாக இருக்கும். விவசாயிகள், சிவகங்கையில், மதுரை ரோட்டில் உள்ள விதை பரிசோதனை மையத்தில் ரூ.30 செலுத்தி, இருப்பு வைத்துள்ள விதை நெல்லில், 50 கிராம் மட்டுமே கொடுத்தால், 14 நாட்களுக்கு பின் முடிவு விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும், என்றார். http://www.dinamalar.com/district_detail.asp?id=1389217

No comments:

Post a Comment