வங்கக்கடலில்
உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கொட்டித்தீர்த்த கனமழை
அந்த
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த திங்கட்கிழமை இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்த போது
வட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் கனமழை
கொட்டித்தீர்த்தது. இதனால் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் உண்டானது.
மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான
மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.
அந்த
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்ததால் வேலூர், திருவண்ணாமலை, சேலம்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
தொடர்ந்து
மேற்கு நோக்கி நகர்ந்து கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக
நிலை கொண்டிருந்தது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது.
இந்த
நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி
இருக்கிறது.
இதுகுறித்து
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
வலுவடைய வாய்ப்பு
கேரளா
மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதன்கிழமை நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி
மேற்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே காற்றழுத்த
தாழ்வு பகுதியாக உள்ளது.
இதன்
காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று), தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும்,
வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
கனமழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
சென்னையை
பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை
பெய்யக்கூடும்.
இதற்கிடையே,
தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இந்த
காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து சனிக்கிழமை (நாளை) தென்கிழக்கு வங்கக்கடலில்
காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.
பலத்த மழை பெய்யும்
இந்த
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சனிக்கிழமை முதல் 16–ந்தேதி வரை தமிழகம் முழுவதும்
மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னை,
காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களிலும்,
புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும்.
பிற மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு
தமிழ்நாட்டில்,
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:–
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சீபுரம், செய்யூர் ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., அரக்கோணம் 9 செ.மீ., மதுராந்தகம்
8 செ.மீ., சென்னை மீனம்பாக்கம், நத்தம், திருவையாறு தலா 7 செ.மீ., தாம்பரம், அன்னூர்,
செங்கல்பட்டு, பழனி தலா 6 செ.மீ., கொளப்பாக்கம் 5 செ.மீ., தாமரைப்பாக்கம், பூந்தமல்லி,
செம்பரம்பாக்கம், மரக்காணம், உத்திரமேரூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், தரமணி, உடுமலைப்பேட்டை,
திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்து உள்ளது.
இவ்வாறு
அவர் கூறினார்.
No comments:
Post a Comment