Sunday, November 15, 2015

துவரை மகசூலை அதிகரிக்க மானியம்



நத்தம்:நத்தம் பகுதியில் துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்கும் வகையில் டி. . பி., கரைசல் தெளிக்க மானியம் வழங்கப்படுகிறது.

சமுத்திராப்பட்டி, மூங்கில்பட்டி, களத்துப்பட்டி, செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மானாவாரியாக துவரை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பூ உருவாகி காய் பிடிக்கும் தருவாயில் உள்ளது. அதிக காய்கள் பிடிக்கவும், பருப்புகள் திரட்சியாக உருவாகவும் டி. . பி., கரைசல் உரத்தை ஏக்கருக்கு 4 கிலோ வீதம் 20 லிட்டர் தண்ணீரில் ஊரவைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி தெளிந்த நீரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டுமென வேளாண்மை துறையினர் தெரிவித்தனர். இரண்டரை ஏக்கரில் தெளிப்பதற்கு ரூ.650 வீதம் பணி நிறைவு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் உளுந்து, தட்டை பயிர், பாசிப்பயிர் உள்ளிட்ட பயறு வகை சாகுபடிக்கும் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் நத்தம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அனுகலாம்.


No comments:

Post a Comment