உத்தமபாளையம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டியில் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் பயிற்சி நடைபெற்றது. இதில் குள்ளப்புரம் அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். அவர்கள் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து எத்தனை முக்கியமானது என்றும், அதனை தாதுஉப்பு கலவை மூலம் எளிதில் அவற்றுக்கு வழங்க முடியும் என்றும் அவற்றை வளர்ப்பவர்களிடம் கூறினர்.
அத்துடன் இந்த தாது உப்பு கலவையை கன்றுகளுக்கு 5 கிராம் அளவிலும், கறவை மாடுகள், சினையுற்ற பசுக்கள் மற்றும் காளை மாடுகளுக்கு 30 முதல் 40 கிராம் வரையிலும் கொடுக்கவேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மாடுகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளையும் மாணவிகள் கொடுத்தனர்.
Source : Dailythanthi

No comments:
Post a Comment