Monday, November 16, 2015

நெற்பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க ஆய்வுக்குழு




காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழைநீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுக்க, ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள், தண்ணீர் மூழ்கி, நாசமாகி வருகின்றன. எனவே, பாதிப்பிற்குள்ளான நெற்பயிர் கள் குறித்து ஆய்வு நடத்த சிறப்பு குழு ஒன்றை, வேளாண் இணை இயக்குனர் சீத்தாராமன் அமைத்துள்ளார்.அதன்படி, சிட்லப்பாக்கம், காட்டாங்கொளத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர் மற்றும் பவுஞ்சூர் ஆகிய வட்டாரங்களில், நெற்பயிர் பாதிப்பு குறித்து கணக்கிட, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், படப்பை, ஸ்ரீபெரும்புதுார், சிறுகாவேரிப்பாக்கம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் ஆகிய வட்டாரங்களில், நெற்பயிர் பாதிப்பு குறித்து கணக்கிட, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், தங்களின் பயிர் சேதம் பற்றிய தகவல்களை, மண்டல அலுவலர்களிடமோ அல்லது உதவி இயக்குனர்களிடமோ அளிக்கலாம், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment