Monday, November 16, 2015

சொட்டு நீர் பாசன கருவிகளுக்கு வேளாண்துறை மானிய உதவி


விழுப்புரம்: சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, நுண்ணீர் பாசன திட்டத்தின்படி, அரசு மானிய உதவி வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன திட்டம் 3 ஆயிரத்து 500 எக்டர் பரப்பில் செயல்படுத்தப்படுகிறது.
நுண்ணீர் பாசன கருவிகள் பொருத்தும் பணியை செய்வதற்கு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 34 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆகிய துறைக ளால் திட்டம் செயல்படுத்தபடுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 5 எக்டர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 5 எக்டர் வரை மானியம் வழங்கப்படுகிறது.
பெண்கள், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் நில சிட்டா, அடங்கல், வரைபடம், ரேஷன் கார்டு நகல், சிறு விவசாயி சான்று, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, மண் மற்றும் பாசன நீர் ஆய்வு அறிக்கைகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றை வட்டார அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
குத்தகைதாரர்களாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். பாசன ஆதாரம் இல்லாத பாசன நீர் பங்கீடு ஒப்பந்த ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகவலை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மணிமொழி தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment