Monday, November 16, 2015

விவசாயத்திற்குதடையில்லா மின்சாரம்



மேட்டூர்:மின்தேவை சரிவால், விவசாய நிலங்களுக்கு, 24 மணிநேர மின் சப்ளை கிடைத்தது; ஆனால், நிலத்தில் ஈரப்பதம் இருப்பதால், மின் மோட்டார் இயக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்வதால், நேற்று முன்தினம், 9,270 மெகாவாட்டாக இருந்த தமிழக மின்தேவை நேற்று, 8,470 மெகாவாட்டாக சரிந்தது.
இதனால் மின் வாரியம், தமிழகம் முழுவதுமான விவசாய நிலங்களுக்கு, 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியது. எனினும், விளைநிலங்களில் ஈரப்பதம் இருப்பதால், மும்முனை மின்சாரத்தை பயன்படுத்தி, 'பம்ப்செட் மோட்டார்'களை, விவசாயிகள் இயக்கவில்லை.
மழை தீவிரம் குறைந்து, மோட்டார்களை இயக்கும் சூழல் ஏற்படும்போது, மின்தேவை அதிகரிக்கும் என்பதால், வழக்கம் போல, விவசாயத்துக்கான மும்முனை மின் வினியோக நேரத்தை வாரியம் குறைத்து விட வாய்ப்புள்ளது என, விவசாயிகள் கருதுகின்றனர்.



No comments:

Post a Comment