திருவாடானை தாலுகா ஆர். எஸ். மங்கலம் அருகே சோழந்தூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வயல் விழா முகாமில் மண் அட்டைகள் வழங்கப்பட்டன.
வட்டார வேளாண்மைத் தொழில் நுட்ப இயக்க முகமை மாநில விரிவாக்க திட்டங்களுக்குகான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வயல் விழா முகாம் நடைபெற்றது. இதில் சோழந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜயினாலாவுதீன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் உலகுசுந்தரம் வரவேற்றுப் பேசினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் மோகன்ராஜ், மண்வள அட்டை இயக்கம் மற்றும் உர சிபாரிசு பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை நடமாடும் மண் பரிசோதனை நிலைய அலுவலர் முருகேஸ்வரி, மண் பரிசோதனை, மண் மாதிரி எடுத்தல் மற்றும் மண்வள அட்டை பற்றி விளக்கம் அளித்தார்.
முகாமில், விவசாயிகளுக்கு மண்வள அட்டை, உர சிபாரிசு மற்றும் மண் மாதிரி எடுத்தல் செயல் விளக்கம் செய்து காட்டபட்டது. மண் மாதிரி மற்றும் உர சிபாரிசு பற்றிய பிரசுரங்கள் வழங்கபட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தாம் மற்றும் ராம்குமார் செய்தனர்.
Source : Dhinamani
No comments:
Post a Comment