Thursday, November 5, 2015

ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டத்தில் பசுந்தீவன விதை உற்பத்தி பண்ணை


ராமநாதபுரம், :ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்களில் பசுந்தீவன விதை உற்பத்தி பண்ணை அமைக்கப்படுகிறது.கால்நடைகளுக்கு உலர், அடர், பசுந்தீவனம் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டத்தால் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உலர், பசுந்தீவனத்திற்கு பற்றாக்குறை நிலவுகிறது.
மேய்ச்சல் நிலம் அழிப்பு, வறட்சி போன்றவற்றால் பசுந்தீவனம் பற்றாக்குறை 25 சதவீதம் உள்ளது. இதனால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனை தவிர்க்க மாநில அரசு தீவன அபிவிருத்தி திட்டத்தில் ராமநாதபுரம் உட்பட 7 மாவட்ட கால்நடை பண்ணைகளில் பசுந்தீவன விதை உற்பத்தி செய்யப்பட உள்ளது.விதை உற்பத்தி பண்ணை ஒவ்வொரு மாவட்டத்திலும் 60 முதல் 70 ஏக்கர் வரை அமைக்கப்படுகிறது. மொத்தம் 480 ஏக்கரில் அமைக்க ரூ.4.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவன விதைகள் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும்.



No comments:

Post a Comment