Wednesday, November 18, 2015

கரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.52 லட்சம் இலக்கு நிர்ணயம் கலெக்டர் ஜெயந்தி தகவல்




கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் மானியத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில்:- 

ஒவ்வொரு ஆண்டும் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்திற்கு முன்வரும் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 2015-16-ம் ஆண்டிற்கு 160 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 160 யூனிட்கள்(ஒரு யூனிட்டுக்கு 250 கோழிகள் வீதம்) வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.
 

இந்த நிகழ்ச்சியில் கரூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல், உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  

No comments:

Post a Comment