Monday, November 16, 2015

1.82 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி இலக்கு: தொடர் மழையால் நடப்பாண்டில் நம்பிக்கை




கரூர்: கரூர் மாவட்டத்தில், கடந்தாண்டை காட்டிலும், நடப்பாண்டில், தொடர் மழை காரணமாக, 1.82 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி இலக்கை எட்ட வாய்ப்பு இருப்பதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில், இரண்டாம் பசுமைப்புரட்சியை உருவாக்கும் விதத்தில், வேளாண் துறையின் மூலம் பல்வேறு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் உணவு உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மகசூல் பெருக்கம்: தமிழகத்தில் குறைவான மழை பெய்யும் மாவட்டத்தில், கரூர் ஒன்று என்பதால், காவிரி, அமாரவதி மற்றும் ஏரி, குளங்களில் ஆகியவற்றி கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தில் மகசூல் பெருக்க வேளாண் துறை முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு, முக்கிய பயிராக சோளம், 18 ஆயிரம் ஹெக்டேரும், நெல், 14 ஆயிரம் ஹேக்டேரும் மற்றும் கரும்பு, வாழை, துவரை உளுந்து போன்ற சிறுதானியங்கள் ஆண்டு தோறும் சராசரியாக பயிரிடப்பட்டு வருகிறது. இதனால், ஆண்டு தோறும் படிபடியாக உணவு உற்பத்தி கரூர் மாவட்டத்தில் சீராக உயர்த்தி வருகிறது.


வறட்சியால் குறைவு: இதுகுறித்து, வேளாண் இணை இயக்குநர் மதனகோபல் கூறியதாவது: திருத்திய நெல் சாகுபடி, பயறு மற்றும் தனியங்கள் உற்பத்தி பெருக்க பல்வேறு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதையடைய திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டது. கடந்த, 2012-13ல், 50 ஆயிரத்து, 667 ?ஹக்டேரில் சாகுபடி நடந்தது. அந்த ஆண்டு வறட்சி காரணமாக, 58 ஆயிரத்து, 714 மெட்ரிக் டன் மட்டுமே உணவு உற்பத்தி நடந்தது.


மிஞ்ச வாய்ப்பு: இருப்பினும், 2013-14ல், 57 ஆயிரத்து, 666 ஹெக்டேரில், ஒரு லட்சத்து, 24 ஆயிரத்து, 451 மெட்ரிக் டன் உற்பத்தி அடைய முடிந்தது. இந்த இரண்டு ஆண்டுகளை விட, 2014-15ல், 74 ஆயிரத்து, 378 ஹெக்டேரில், ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 407 மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டது. நடப்பாண்டில், இதுவரை, 49 ஆயிரத்து, 892 ஹெக்டேர் சாகுபடி நடந்து வருகிறது. இதில், சோளம், 18 ஆயிரத்து, 488 ஹெக்டேரும், சம்பா நெல், 9,236 ஹேக்டரும் நடந்து உள்ளது. தற்போது, பருவமழை கை கொடுத்து வருவதால், கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில், 1.82 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி இலக்கை மிஞ்சும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



No comments:

Post a Comment