Thursday, January 21, 2016

ஆசிய நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்: ஸ்வீடன் பல்கலை. ஆய்வில் தகவல்

வருங்காலத்தில் ஆசிய நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என ஸ்வீடன் கோத்தென்பெர்க் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டீலியாங் ஷென் கூறியதாவது:
 சீனா, இந்தியா, நேபாளம் மற்றும் இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி, நதி நீர் பயன்பாடு மற்றும் பருவ நிலை மாற்றம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. 
 வருங்காலத்தில் ஆசிய நதிகளில் தண்ணீர் வரத்து பெருமளவு குறையும் என்று பருவநிலை மாற்ற ஆய்வு வல்லுநர்கள் கவலை தெரிவித்துவந்தனர். 
 இந்தநிலையில் பருவநிலை மாற்றத்தால் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால் எதிர் வரும் காலங்களில் யாங்ட்ஸி, மீகாங்க், சல்வீன், பிரம்மபுத்திரா மற்றும் சிந்து நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது, 1971-2000 ஆண்டுகளில் காணப்பட்ட தண்ணீர் வரத்தை விட அதிகமாக இருக்கும். 
 இதையடுத்து, நதிகளை ஒட்டியுள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் அதிகமாகப் பயன் பெறும் என்று ஷென் தெரிவித்தார்.
 இந்த ஆய்வுக் கட்டுரை "குளோபல் அண்டு பிளானட்டரி சேஞ்ச்' என்ற இதழில் வெளியாகி உள்ளது.
 

Source : Dinamani

No comments:

Post a Comment