Thursday, January 21, 2016

ஆண்டு முழுவதும் சாகுபடிக்குகம்புநேப்பியர் ஒட்டுப்புல்

ராமநாதபுரம்,:கால்நடை தீவனப்பயிரான கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லை ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என, விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லை அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். ஆண்டு முழுவதும் பயிரிடலாம். அவற்றை சாகுபடி செய்ய நிலத்தை 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். எக்டேருக்கு 25 டன் தொழு உரமிட வேண்டும். 60 செ.மீ., இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்.
எக்டேருக்கு 150 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 40 கிலோசாம்பல் சத்து இட வேண்டும். நன்கு நீர் பாய்ச்சிய பின் இருபரு கொண்ட தண்டுக்கரணை அல்லது வேர்க்கரணையை 60க்கு 50 செ.மீ., இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 30 வது நாளில் 50 சதவீதம் தழைச்சத்து உரங்களை இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்பும் 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இட வேண்டும்.
எக்டேருக்கு தழை, மணிச்சத்தின் அளவில் 75 சதத்துடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை தலா 2 கிலோ, 4 கிலோ அசோபாஸை கலந்து இட வேண்டும். இதன்மூலம் உரச் செலவு குறையும். பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். 80 நாட்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 400 டன் வரை மகசூல் கிடைக்கும், என்றனர். 

Source : Dinamalar

No comments:

Post a Comment