Monday, January 4, 2016

விவசாயிகளுக்கு கை கொடுக்கும் சோளம்


தேனி அருகே முத்தலம்பட்டி, கோவில்பட்டி, மாலப்பட்டி, கதிரகவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கண்மாய் பாசனம் குறைவு. இதனால் இப்பகுதி விவசாயிகள் மானாவாரியை நம்பி உள்ளனர். குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய சோளம், கேழ்வரவு போன்ற பயிர்களை விளைவித்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால் சோளம் நன்றாக வளர்ச்சியடைந்து, மகசூல் பருவத்தை எட்டியுள்ளது.
மாலப்பட்டி விவசாயி தங்கப்பாண்டி கூறுகையில், "" ஒரு ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளேன். மகசூல் பருவத்தில் உள்ளது.
ஏக்கருக்கு குறைந்தது 10 முதல் 15 மூடைகள் மகசூல் கிடைக்கும். களை எடுப்பு, மருந்து தெளிப்புக்கு செலவில்லை. அறுவடைக்கு மட்டுமே கூலி உண்டு. தைப் பொங்கல் முடிந்து ஒரு சில நாட்களில் அறுவடை செய்யப்படும். ஒரு மூடைக்கு வெளி மார்க்கெட்டில் ரூ. 1,100 வரை விலை கிடைக்கிறது. ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்'', என்றார்.
 Source : Dinamalar

No comments:

Post a Comment