இந்தியாவில் முதல் முறையாக இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் மாநிலமாக சிக்கிம் உருவெடுத்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள இயற்கை விவசாய விழாவை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜன.18) தொடங்கி வைக்கிறார்.
சிக்கிம் தலைநகர் காங்டாக்கின் ரிட்ஜ் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை விவசாயத் தோட்டத்தை பிரதமர் மோடி திங்கள்கிழமை பார்வையிடுகிறார்.
காங்கடாக்கை அடுத்த சாரம்சா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள இயற்கை விவசாய விழாவில், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆரஞ்சுப் பழங்களால் வடிவமைக்கப்பட்ட ஹிந்துக் கடவுள் பிள்ளையார் மற்றும் வாழைப்பழங்களால் வடிவமைக்கப்பட்ட புத்தர் சிலை காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
சிக்கிம் மாநிலம் முழுவதிலும் இருந்து வருகை தரும் விவசாயிகள் 55 பேர், தங்களது இயற்கை விவசாய உற்பத்திப் பொருள்களை பிரதமர் மோடி காண்பதற்காக சாராம்சா நகரில் காட்சிக்கு வைக்க உள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான அரசு, சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாயத்துக்கு மாற்ற முடிவு செய்தது. அதையடுத்து, பூச்சிக்கொல்லி மருந்து, உரம் ஆகிய ரசாயனப் பொருள்களை விற்பனை செய்வதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
Source : Dinamani

No comments:
Post a Comment