Tuesday, November 17, 2015

திருந்திய நெல்சாகுபடி விவசாயிகளுக்கு அறிவுரை



உடுமலை,: திருப்பூர் மாவட்டம் மடத்துகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு நெல்,கரும்பு,மக்காச்சோளம் தென்னை,காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில் இரண்டாம் போக சாகுபடிக்கான வாய்ப்பினை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர். 
தற்போது பரவலாக பெய்து வரும் மழையினை பயன்படுத்தி நெல் நாற்று விடும் பணி மற்றும் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் திருந்திய நெல் சாகுபடி மற்று இயந்தி நெல் நடவு குறித்த தொழில்நுட்பங்கள் வேளாண்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இயந்திர நெல் நடவின் மூலம்  ஒரு மணிநேரத்தில் ஒரு ஏக்கர் நடவு மேற்கொள்ள இயலும். ஒரு ஏக்கருக்கு 15 கிலோ விதைகள் தேவைப்படும. பாய் நாற்றங்கால் அமைப்பதால்  ஒரு ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதுமானது. மேலும் 15 நாள் நாற்றினை சீரான இடைவெளியில் நடுவதால் அதிக தூர் கிளைத்து வளர்கின்றன. சீரான இடைவெளியில் காற்றோட்ட வசதியுடன் இருப்பதால் பூச்சி தாக்குதல் குறிப்பாக நெற்பயிரை அதிகளவில் தாக்கும் குலைநோய்,புகையான் உள்ளிட்ட நோய்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. தற்போது மடத்துகுளம் வட்டாரத்தில் சாமராயப்பட்டி கிராமத்தில் இயந்திர நெல் நடவு நடைபெற்று வருகிறது. இது இயந்திர நடவு மேற்கொள்ள ஒரு எக்டருக்கு ரூ.3 ஆயிரம் வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. எனவே இயந்திர நெல் நடவு மேற்கொள்ள விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அல்லது சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களையோ தொடர்பு கொள்ளும்மாறு வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் மடத்துகுளம் 97904-57111, குமரலிங்கம் 98422-86109, துங்காவி 94882-53054,கணியூர் 75027-28566.


http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=507795&cat=504

No comments:

Post a Comment