மேட்டூர்: டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏரி, குளங்களில் ஏற்படும் உடைப்பை தடுக்க, தளவாடங்களுடன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை மாவட்டங்களில் தீவிரம் அடைந்த வடகிழக்கு பருவமழையால், ஏரிகள், குளங்கள் நிரம்புகின்றன. பலத்தமழையால், ஏரி, குளங்களில் ஏற்படும் உடைப்பை தடுக்க தேவையான தளவாடங்களுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் அசோகன் கூறியதாவது: திருச்சி மண்டலத்தில், 2,352 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த பருவமழையால், 163 ஏரிகள் நிரம்பி விட்டன. மேலும், 97 ஏரிகளில், 75 சதவீதத்துக்கு மேலும், 200 ஏரிகளில், 50 முதல், 75 சதவீதமும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதர, 1,900 ஏரிகளில், 25 சதவீதம் நிரம்பியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில், பாதிப்பை தடுக்க, 3 லட்சம் சாக்குபைகள், 100 யூனிட் மணல், 1,000 சவுக்கு கம்புகள் என, தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான சாதனங்களுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கல்லணைக்கு நீர்வரத்து: தலைமை பொறியாளர் அசோகன் கூறுகையில், ''மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்ட போதிலும், கல்லணைக்கு, 3,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரை கொண்டு, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள ஏரிகளை நிரப்புகிறோம். இதில், 526 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன,'' என்றார்.
Source : Dhinamalar
No comments:
Post a Comment