Thursday, November 19, 2015

பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு திட்டம் துவக்கம்..! விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வருவாய் வாய்ப்பு




மதுரை: மதுரை மாவட்டம் சேடப்பட்டி யூனியன் வண்டப்புலி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி முகமை மூலம், மூன்று பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு திட்டம் துவக்கப்பட்டது. விவசாயத்திற்கு தண்ணீர் பெறுவதுடன், விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கூடுதல் வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளது.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மூலம் மாவட்டத்தில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அதிகம் அமைக்கப்படுகின்றன. இதில் 600 குட்டைகள் அமைக்கும் பணி நடக்கின்றன. 200 குட்டைகளின் பணி முடிந்து விட்டது.சேடப்பட்டி யூனியனில் தாதம்பட்டியில் அதிகபட்சமாக 58 குட்டைகள் வரை அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், விவசாயத்திற்கும் தண்ணீர் பெற முடியும். தற்போது இந்த குட்டைகளில் விருப்பத்துடன் முன்வரும் விவசாயிகளுக்கு மீன் பண்ணையும் அமைத்து கொடுக்க கலெக்டர் சுப்பிரமணியன், கூடுதல் கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டனர்.
மீன் வளர்ப்பு துவக்கம்வண்டப்புலி ஊராட்சியில் மூன்று பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு திட்டம் நேற்று துவங்கப்பட்டது. கூடுதல் கலெக்டர் ஒவ்வொரு 
குட்டையிலும் தலா ஆயிரம் மீன்குஞ்சுகளை குட்டைகளில் விட்டு துவக்கி வைத்தார்.அவர் கூறியதாவது: பண்ணை குட்டைகள் மீன் வளர்ப்புக்கு ஏற்ற வகையில் 1500 மீட்டர் ஆழம் கொண்டதாக அமைக்கப்படுகின்றன. வண்டப்புலியில் மூன்று குட்டைகளில் விடப்பட்ட குஞ்சுகள், 7 மாதங்கள் வளர்ந்து விடும். விவசாயிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதுடன், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வருவாய் ஈட்டவும் வாய்ப்புள்ளது, என்றார்.


No comments:

Post a Comment