திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் விவசாயிகளுக்கு அண்மையில் நடைபெற்றது.
முகாமுக்கு வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சா.ஷீபா முன்னிலை வகித்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் சாகுபடி நிலப்பரப்பு குறைதல், நகரமயமாதல், வேலையாட்கள் பற்றாக்குறை, வெள்ளம், வறட்சி போன்ற பல காரணிகளால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே ஒருங்கிணைந்த பண்ணையத்தில் விவசாயம் சார்ந்த அதன் உப தொழில்களான கறவைப் பசு வளர்ப்பு, பரண்மேல் ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்ப்பு மற்றும் வேளாண் காடு வளர்ப்பு போன்றவற்றை பல்வேறு வேளாண் மண்டலங்களில் நன்செய், புன்செய் மற்றும் மானாவரி நிலங்களுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
கால்நடை தொழில்நுட்ப வல்லுநர் மருத்துவர் ம.பாலுமகேந்திரன் மற்றும் பயிர் நோயியல் துறை வல்லுநர் கு.கவிதா ஆகியோர் இப்பயிற்சியினை விவசாயிகளுக்கு அளித்தனர்.
http://www.dinamani.com/edition_villupuram/villupuram/2015/09/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article3022112.ece
No comments:
Post a Comment