Sunday, September 27, 2015

மஞ்சள் பயிரில் இலைத் தீயல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை :



பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் சுமார் 1,630 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் பயிரை டேப்ரினா மேக்குலன்ஸ் எனும் பூஞ்சை தாக்கி இலைத் தீயல் நோய் ஏற்படுத்துகிறது.
மேலும், காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்ட இந்நோயை உடனடியாகக் கட்டுப்படுத்த வழிமுறைகள்:
இந்நோயால் தாக்கப்பட்ட இலைகளைப் பறித்து தீயிட்டு கொளுத்திவிட்டு, "அசாஸிஸ்ட்ரோபின்' மற்றும் "டைபென்கோனசோல்' எனும் இரு மருந்துகளின் சேர்க்கை கொண்ட பூஞ்சாணக் கொல்லியை 1 லி நீருக்கு 1 மி என்ற அளவில் கலந்து 10 நாள் இடைவெளியில் நோயின் தீவிரத்தைப் பொறுத்து 2 (அ) 3 முறை தெளிக்க வேண்டும்.
மேலும், மஞ்சள் இலைகள் வெளிர் நிறத்தில் காணப்பட்டால், மருந்து தெளிக்கும் போதே நீரில் கரையக்கூடிய 19-19-19 உரத்தை 1 லி நீருக்கு 5 கி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் என வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத் தலைவர் (பொ) ஜெ. கதிரவன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dhinamani

No comments:

Post a Comment