மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மஞ்சள் பயிர் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சொட்டு நீர் பாசனம்
மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பொரசப்பட்டு, பொருவளூர், மேல்சிறுவள்ளூர், சவேரியார்பாளையம், வடகீரனூர், வடபொன்பரப்பி, கடுவனூர், புளியங்கொட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை அதிக பரப்பளவில் சாகுபடி செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணத்தால் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் தற்போது சொட்டு நீர் பாசனம் மூலம் மஞ்சள் பயிரை சாகுபடி செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:– செர்ட்டு நீர் பாசனம் மூலம் பயிர்கள் சாகுபடி செய்வதால் எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடும் அதிக அளவில் களைகளும் வருவது இல்லை. இதனால் உற்பத்தி செலவு எங்களுக்கு பெருமளவு குறைந்துள்ளது. இதேபோல் மணிலா பயிரையும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் பலர் சாகுபடி செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/News/Districts/Villupuram/2015/09/08015628/With-drip-irrigation--Yellow-cultivation--Interested.vpf
No comments:
Post a Comment