தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட் டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை எடுக்கப்பட்ட மழை அளவின்படி கொடைக்கானலில் 38 மி.மீ., வேலூரில் 31 மி.மீ., தருமபுரியில் 14 மி.மீ. மழை பதிவானது.
No comments:
Post a Comment