விருதுநகர் மாவட்டம் கத்தாளம்பட்டி கிராமத்தில் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் வேளாண்மை இயக்கம் சார்பில் குதிரைவாலி பயிர் சாகுபடி குறித்த முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு குழு அமைக்கப்பட்டது. குழுவில் உள்ள விவசாயிகள் தலா ஒரு ஏக்கர் பரப்பளவில் குதிரைவாலி பயிர் செய்ய பயிற்சி வழங்கப்பட்டது. ம.ரெட்டியபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் நாச்சியார் அம்மாள் விவசாயிகளுக்கு குதிரைவாலி அங்கக சாகுபடி பற்றி விளக்களித்தார்.
தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு குதிரைவாலி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. வேளாண்மை உதவி அலுவலர் ஜெயபாண்டியன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
No comments:
Post a Comment