Thursday, September 10, 2015

தோட்டக்கலை சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.2.80 கோடியில் மானியம்: ஆட்சியர்


சிவகங்கை மாவட்டத்தில் 2015- 2016 ஆம் ஆண்டிற்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2.80 கோடி மானியம் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் . மலர்விழி தெரிவித்தார்.

  சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 13,500 ஹெக்டேர் பரப்பில் பழமரங்கள், முந்திரி, காய்கறி மற்றும் மலர் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், நவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. சாகுபடி பரப்பு விரிவாக்கத்தைப் பொறுத்தவரை ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 4 ஹெக்டர் பரப்பிற்கு வழங்கப்படுகிறதுவீரிய ஒட்டு காய்கறி விவசாயத்தில் வெண்டை, கத்தரி, தக்காளி, மற்றும் மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு காய்கறி நாற்றுகள் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது. ஒரு ஹெக்டர் பரப்பிற்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு 200 ஹெக்டேர் ரூ.40 லட்சம் மானியத்தில் செயல்படுத்தபடவுள்ளது. அதேபோல்மா அடர் நடவு சாகுபடியில், ஒரு ஹெக்டர் பரப்பில் 5 மீ இடைவெளியில் நடவு செய்யும் உயர் விளைச்சல் தரும் மா ஒட்டுக் கன்றுகள் விவசாயிகளுக்கு ரூ.9,840  மானியத்தில் விநியோகிக்கப்படவுள்ளது. இதில், மொத்தம் ரூ.6.88 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது. கொய்யாவில் ஒரு ஹெக்டர் உயா  விளைச்சல் ரக கொய்யா சாகுபடி செய்ய ரூ.17,599 மானியத்தில் கன்றுகள் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு 30 ஹெக்டேர் பரப்பில் கொய்யா கன்றுகள் வழங்க விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.2.28 லட்சம் மானியம் வழங்கப்பட்ட உள்ளது. அதேபோல், குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தரும் வீரிய ஒட்டு பப்பாளி ரகங்கள் 130 ஹெக்டேரில் சாகுபடி செய்ய ரூ. 29.25 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஹெக்டர் சாகுபடிக்கு ரூ.22,500  மானியம் வழங்கப்படுகிறது. மேலும், முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு  ஹெக்டேருக்கு ரூ.12,000  என்ற விகிதத்தில் முந்திரி ஒட்டுக் கன்றுகள் மற்றும் இடுபொருள்கள் 100 ஹெக்டேர் பரப்பிற்கு வழங்கப்படவுள்ளது.
 மலர் பயிரான மல்லிகை சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.16,000  மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 80 ஹெக்டேர் பரப்பில் மல்லிகை சாகுபடிக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. ஒரு சதுர மீட்டருக்கு ரூ.468 மானியத்தில் 10,000 .மீ பரப்பில் பசுமைக்குடில் அமைக்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.46.75 லட்சம் வழங்கப்படவுள்ளது.
 இதே போன்று நிழல் வலை கூடங்கள் அமைத்து சாகுபடி மேற்கொள்ளவும் வீரிய ஒட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யவும் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.355 மானியத்தில் மொத்தம் 10,000 .மீ. பரப்பில் நிழல்வலை அமைக்க ரூ.35.5 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது. நிலத்தில் உள்ள ஈரப்பதம் ஆவியாவதைத் தடுக்க நிலப்போர்வை அமைக்க ஒரு ஹெக்டருக்கு ரூ.16,000 மானியத்தில் 100 ஹெக்டேர் பரப்பில் நிலப்போர்வை அமைக்க விவசாயிகளுக்கு ரூ.16 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.   இதே போன்று தேனி வளர்ப்பு, விவசாய கருவிகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதனால், தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/edition_madurai/sivagangai/2015/09/11/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/article3021917.ece

No comments:

Post a Comment