Thursday, September 10, 2015

கர்நாடகத்தில் செப்.15 வரை மழைக்கு வாய்ப்பு



கர்நாடகத்தில் செப்.15-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 24 மணி நேரத்தில் வட கர்நாடகத்தின் உள்பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருந்தது. இதே காலக் கட்டத்தில் கடலோர கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், தென் கர்நாடகத்தின் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்தது.
தார்வாட் மாவட்டத்தில் நவலகுந்தாவில் 100 மி.மீட்டர், யாதகிரி மாவட்டத்தில் சைதாபூரில் 90 மி.மீட்டர், பாகல்கோட்டை மாவட்டத்தில் லோகாபூர், ராய்ச்சூரு மாவட்டத்தில் சிந்தனூரில் தலா 80 மி.மீட்டர், விஜயபுரா மாவட்டத்தில் நாகதன், ராய்ச்சூரு மாவட்டத்தில் தியோதுர்கில்லில் தலா 70 மி.மீட்டர், கலபுர்கி மாவட்டத்தில் கலபுர்கி, எத்ராமி, ராய்ச்சூரில் தலா 60 மி.மீட்டர் மழை பதிவாகின. கடலோர கர்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வட, தென் கர்நாடகத்தின் உள் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் 15-ஆம் தேதி வரையில் மிதமானது முதல் மிகவும் பலத்த மழை
வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கர்நாடகம் மற்றும் வடகர்நாடகத்தின் உள்பகுதியில் பலமான மழை பெய்யக்கூடும். கடலோரகர்நாடகம் மற்றும் தென்கர்நாடகத்தின் உள்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும், பெங்களூரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 28 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

http://www.dinamani.com/edition_bangalore/2015/09/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95/article3022211.ece

No comments:

Post a Comment