மனித சமுதாயம்
சிறந்த உடல்
நலம் பெற யோகா
அவசியம் என்றார்
மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்
க. முனுசாமி.
பெரம்பலூர் மாவட்ட
அளவில் இளையோர்
செஞ்சிலுவைச் சங்க
உறுப்பினர்களுக்கு ஒரு
நாள் பயிற்சி,
பெரம்பலூர் மனவளக்
கலை மன்றம்
மூலம் புதன்கிழமை
அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை
தொடங்கி வைத்து,
மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்
பேசியது:
மனித சமுதாயம்
மகிழ்ச்சி, நிம்மதி,
சிறந்த உடல்
நலம் பெறவும்,
கோபத்தை முழுமையாக
கட்டுப்படுத்தவும் ஆசிரியர்கள்
யோகா பயிற்சியைக்
கற்றுக் கொள்ள
வேண்டும். கற்ற
பயிற்சியை மாணவ
சமுதாயத்துக்கும் கற்றுக்கொடுத்து,
சிறந்த எதிர்கால
சமுதாயத்தை படைக்க
உதவிட வேண்டும்
என்றார் அவர்.
தொடர்ந்து, நிசா,
அமுதா, அண்ணாதுரை,
மருத்துவர் புவனேஸ்வரி,
வழக்குரைஞர் ப. செந்தில்நாதன்
ஆகியோர் கருத்தாளர்களாக
பங்கேற்று மூச்சுப்பயிற்சி,
உடல்நலம் பேணலின்
அவசியம், உடற்பயிற்சி,
காயகல்பப் பயிற்சி
உள்ளிட்ட பல்வேறு
பயிற்சிகளை அளித்தனர்.
மேலும், ஆத்ம
தியானம் குறித்த
குறும்படம் காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து, பயிற்சி
பெற்ற ஆசிரியர்களுக்கு
சான்றிதழ் வழங்கப்பட்டது.
முகாமுக்கு மாவட்டக்
கல்வி அலுவலர்
சி. ஜெயராமன்,
பெரம்பலூர் மாவட்ட
இந்திய செஞ்சிலுவை
சங்கச் செயலர்
நா. ஜெயராமன்
ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
இதில், ஆலத்தூர்
மற்றும் வேப்பந்தட்டை
ஒன்றிய உதவி
தொடக்கக் கல்வி
அலுவலர்கள் பி. ஜோதிலட்சுமி,
எம். தென்றல்,
பொருளாளர் எம். கருணாகரன்,
இணைக் கன்வீனர்கள்
சாதிக்பாட்சா, த. மாயகிருஷ்ணன்,
எம். கார்த்திக்கேயன்
மற்றும் உயர்நிலை,
மேல்நிலை, நடுநிலைப்
பள்ளிகளை சேர்ந்த
85 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிர்வாக அலுவலர்
சந்திரசேகர் வரவேற்றார்.
மாவட்ட கன்வீனர்
வெ. ராதாகிருஷ்ணன்
நன்றி கூறினார்.
http://www.dinamani.com/edition_trichy/perambalur/2015/09/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-/article3022101.ece
No comments:
Post a Comment