Thursday, September 10, 2015

விளை பொருள்களை சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி



வேளாண் விளை பொருள்களின் மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி பெரணமல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மைத் துறையில் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் இந்தப் பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் கோ.ரமணன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற பயிற்சியை, வேளாண் விற்பனை, வணிகத் துறை வேளாண்மை அலுவலர் சண்முகம் நடத்தினார்.
இதில், நெல், தானியங்களின் மதிப்பை எவ்வாறு கூட்டலாம், அவற்றை சந்தைப்படுத்துவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் சங்கர், உதவியாளர்கள் மு.வெங்கடேசன், ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment