தா.பழூர் வட்டார
வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பண்ணை அளவிலான உயிரியல் காரணிகள் உற்பத்தி குறித்த
திறன் மேம்பாட்டு பயிற்சி அணைக்குடம், காரைக்குறிச்சி மற்றும் முட்டுவாஞ்சேரி கிராமங்களை
சேர்ந்த உயிரியியல் காரணிகள் உற்பத்தி குழுவிற்கு அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் வேளாண்மை
உதவி இயக்குனர் பழனிசாமி தலைமையேற்று பேசுகையில் உயிரியல் காரணிகளான டிரைக்கோடெர்மா,ரெடுவிட்
வண்டு,குளவி ஆகியவை உற்பத்தி செய்யும் திட்டம் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும்
விரிவாக எடுத்துக் கூறினார். கிரீடு வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்
ராஜா ஜோஸ்லின் உயிரியியல் காரணிகளின் பயன்பாடுகள் மற்றும் அதனால் தீமை செய்யும் பூச்சிகள்
எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என விரிவாக எடுத்துக்கூறினார். இதில் உயிரியல் காரணிகளின்
செயல்பாடு குறித்த வீடியோ காட்சி காண்பிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் முன்னதாக துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பயிற்சியின் முடிவில் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சகாதேவன் நன்றி கூறினார். பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர்கள நந்தீஸ்வரன், முருகன், சிவக்குமார் ஜோதி,செந்தில்¢ குமார் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் குமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment