ஊட்டி,
சிறுதானியங்களை பயிரிடுவதின்
மூலம் மண்ணின் வளத்தை பாதுகாக்க முடியும் என்று மாவட்ட வன அலுவலர் பத்ரசாமி தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேரணி
நீலகிரி தேசிய பசுமைப்படை மற்றும்
நெஸ்ட் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் சிறுதானியம்
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஊட்டி அருகே உள்ள கல்லட்டி கிராமத்தில் நடத்தின.
நிகழ்ச்சிக்கு ஏக்குணி பள்ளி
தலைமை ஆசிரியை ஷீலா குமாரி தலைமை தாங்கினார். விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வன அலுவலர்
பத்ரசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:–
சிறுதானியங்கள்
சிறு தானியங்களை உற்பத்தி செய்ய
குறைந்த அளவு தண்ணீர் மற்றும் உரம் போதுமானது. மேலும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி
மருந்துகளும் இதற்கு அதிகம் தேவைப்படுவது இல்லை. இதன் மூலம் மண்ணின் வளம் பாதிக்கப்படாமல்
பாதுகாக்கப்படுகிறது.
மனிதர்களுக்கு தேவையான சத்துக்களை
சிறுதானியங்கள் அளிக்கின்றன. இதனால் மனிதர்கள் முழு ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
மண்ணில் நுண்ணுயிர் சத்துக்கள் இருந்தால் தான் அனைத்து வகையான தாவரங்களும் வளர முடியும்.
எனவே ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை நாம் கட்டுப்படுத்துவதோடு,
சிறுதானியங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நெஸ்ட் அறக்கட்டளை
தலைவர் சிவதாஸ், கூடலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்,
பள்ளி ஆசிரியைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment