களைகளை உரமாக பயன்படுத்துதல்: களைகளை வெறும் களைச் செடியாக கருதாமல் அவற்றிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை கருத்தில் கொண்டு அவற்றை இடுபொருளாக அங்கக வேளாண்மையில் பயன்படுத்துவது மிகவும் அவசியம். களைகளை ஊட்டச்சத்து உள்ள ஆதாரங்களாக மாற்றி கொள்ள வேண்டும். பயிர்களில் களை எடுத்த பிறகு அக்களைகளை பசுந்தழை உரமாக பயன்படுத்தலாம். களைகள் பூக்கும் பருவத்தில் அவற்றை களை எடுத்து விதைகள் உருவாதலை தடை செய்ய வேண்டும்.
களைகளை கம்போஸ்ட் உரமாக பயன்படுத்தும் முறை : சுமார் 3ஙீ3 அடிக்கு குழி தோண்டி அதனடியில் துளையிட்டு 1 அடிக்கு களைகளைக் கொண்டு குழியினை நிரப்பி 2.5 செ.மீ. தொழுஉரம், 1.25 செ.மீ சுண்ணாம்பு பொடியும் இட வேண்டும். சுமார் 2 வாரத்திற்கு ஒருமுறை மூங்கில்களில் கொண்டு கிளறி விட வேண்டும். 3 மாதத்திற்குள் கம்போஸ்ட் தயாராகி விடும்.
மண்புழு உரம் தயாரித்தல் : ஆப்ரிக்கன் மண்புழு, சிவப்பு மண்புழு, மக்கும் மண்புழு போன்றவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திற்கான சிறந்த மண்புழுக்கள் ஆகும்.
படுக்கை அமைத்தல்: நெல்உமி அல்லது தென்னை நார்க்கழிவு அல்லது கரும்பு தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ. உயரத்திற்கு பரப்பி ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண்ணைப் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும். கால்நடைக் கழிவுகள், பண்ணைக்கழிவுகள், பயிர்க்கழிவுகள், காய்கறிக்கழிவுகள், மண் அங்காடி கழிவுகள், வேளாண் சார்ந்த தொழிற்சாலை கழிவுகள் ஆகியவை அனைத்தும் மண்புழு உரம் தயாரிக்க மிகச் சிறந்தவை.
மண்புழுக்களின் ஈரப்பதம் 70 சதவீதம் அடையுமாறு கணக்கெடுக்க வேண்டும். ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு 2 கிலோ மண்புழு தேவைப்படும். மண்புழுக்களை மண்புழு படுக்கையின் மீது தூவினால் போதும். மண்புழுக்கள் தானாகவே உள்ளே சென்று விடும்.
அறுவடை செய்யும் முறை: மண்புழு உர படுக்கைகளின் மேல் உள்ள மண்புழு உரத்தை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். மண்புழு உரத்தினை அறுவடை செய்யும் போது மண்புழு வெளியில் தெரியும் நிலை வரைக்கும் அறுவடை செய்ய வேண்டும். சிறிய படுக்கை முறையில், கழிவுகள் முழுவதும் மக்கிய பிறகு அறுவடை செய்தால் போதுமானது.
அறுவடை செய்யப்பட்ட மண்புழு உரத்தினை 40 சதவீதம் ஈரப்பதத்தில் சூரியஒளி படாதவாறு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். மண்புழு உரத்தினை சாக்கு பைகளில் வைத்து கட்டாமல் திறந்த வெளியில் சேமித்து வைப்பது சிறந்தது. 40 சதவீதம் ஈரப்பதத்துடன் திறந்த வெளியில் சேமித்து வைப்பதால் நன்மை பயக்கும். நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதோடு மண்புழு உரத்தின் தரமும் குறையாமல் இருக்கும். விற்பனை செய்யும் தருணத்தில் மட்டுமே மண்புழு உரத்தினை சாக்கு பைகளில் மாற்றி அமைத்தல் வேண்டும்.
அங்கக வேளாண்மைப் பயிற்சி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ""வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை''யில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அங்கக வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றிய ஒருநாள் கட்டணப் பயிற்சி நடைபெற உள்ளது. மண்வளப் பாதுகாப்பு, வீட்டுத்தோட்டம், உயிர் உரங்கள், இயற்கைவழி பயிர் பாதுகாப்பு, மண்புழு உரத் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் பஞ்சகவ்யா தயாரிப்பு, அங்ககச் சான்றளிப்பு குறித்த விபரங்கள் போன்ற விஷயங்கள் பயிற்சியில் சொல்லித்தரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு , தலைவர் மற்றும் பேராசிரியர் வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. தொலைபேசி : 0422 - 661 1206.
முள் சீத்தா: தமிழ்நாட்டில் உள்ள தோட்டங்களிலும் வேலிகளிலும் ஆற்று படுக்கைகளிலும் வளர்ந்து நிற்கின்றன. சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். மருத்துவ குணம் கொண்ட முள் சீத்தா மரங்களின் தாயகம் கரீபியளன் மற்றும் அமெரிக்க நாடுகள் புற்றுநோய் செல்களை கொல்வதற்கான "அசிட்டோ ஜெனின்ஸ்' எனும் மூலப்பொருள் இம்மரத்தின் இலை, தண்டு, வேர்பட்டை , பழம் அனைத்திலும் உள்ளது. இம்மரம் நடவு செய்த 3-4 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும். இதன் பழத்தை சாப்பிடலாம். இலையைப் பொடித்து டீ தூளில் கலந்து தினமும் குடிக்கலாம். பேச்சிப்பாறையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் இதன் கன்றுகள் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்புக்கு : பேச்சிப்பாறை: 04651 - 281 192, விருத்தாச்சலம்-0413 - 238 231.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

No comments:
Post a Comment