2007ம் ஆண்டு சீன நாட்டுக்குச் சென்று வந்தேன். ஷாங்காயில் 3 நாட்கள் அகில உலக பிளாஸ்டிக்ஸ் எக்ஸிபிஷன் மற்றும் மாநாடு நடைபெற்றது. அங்கு சென்று விட்டு, பீகிங், பழைய பீகிங் பார்த்து விட்டு, சீனா முன்னேறியதற்கான காரணத்தை அறிந்து வந்தேன்.
நதிகளை இணைத்து விட்டனர். வீணாக பெட்ரோலியப் பொருட்களை செலவிடுவதில்லை. இராணுவ செலவை குறைத்து விட்டனர். எந்த பேக்டரிக்கும் விடுமுறை இல்லை. வேலை பார்ப்பவர் வாரம் ஒருநாள் லீவு போட்டுக் கொள்ளலாம். நிறுவனம் இரவு, பகல் இயங்கிக் கொண்டிருக்கும். 20 கோடி பெண்களும் பணிபுரிகின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றனர். சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
உணவுக்கு சமையலுக்கு அதிக நேரம் பணம் செலவு செய்வதில்லை. மக்களின் நாட்டுப்பற்று, தங்கள் உடல் நலம் மீதும், குடும்பம் மீதும் அவர்கள் காட்டும் அக்கறை. அந்நாடு அமெரிக்காவுக்கு 210 மில்லியன் டாலர் கடன் கொடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளதே அதற்கு இது தான் காரணம். இங்கு தமிழ்நாட்டுடன் அவர்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். மிக மிக வேதனையாக உள்ளது. பெண்களின் வேலை, உணவு, சமைப்பது, டி.வி., சினிமா பார்ப்பது அரட்டை அடிப்பது. பெண்கள் பத்திரிகைகளின் வேலை, கோலம், அழகுக்கலை, சமையல், வித விதமாக உணவு சமைப்பது பற்றி மட்டுமே எழுதுவது.
இந்த அவல நிலை எப்பொழுது மாறும். 3.75 கோடி பெண்களும் வேலைக்கு செல்வது எப்பொழுது? அனைவரும் தொழில் தொடங்கப் போவது எப்பொழுது? சமையலில் அதிக நேரம் செலவிடாமல் சத்தான பொருட்களைத் தயாரித்து பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடப் போவது எப்பொழுது? பல பயிற்சிகள் பெற்று சிக்கனமாக இருந்து, நேரத்தினை ரேடியோ, டிவி, சினிமாவுக்கு வீணாகாமல் முன்னேறுவது எப்பொழுது? அன்று தான் இந்தியா முன்னேறும். அமெரிக்காவுக்கு ஏன், சீனாவுக்கு கடன் கொடுக்கும் அளவு முன்னேறும். சிந்திப்பீர்களா?.
- எம்.ஞானசேகர்,
விவசாய ஆலோசகர்
93807 55629

No comments:
Post a Comment